

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 1,155 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 8,161 என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
18,761 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தமாக மாநிலத்தில் 785 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
மாநிலத்தில் ஒரே நாளில் 29,117 மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் மொத்தம் 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 814 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
4 லட்சத்து 9 ஆயிரத்து 83 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 19,628 ஆக உள்ளது.