Published : 05 Jul 2020 15:22 pm

Updated : 05 Jul 2020 15:22 pm

 

Published : 05 Jul 2020 03:22 PM
Last Updated : 05 Jul 2020 03:22 PM

சீனாவைக் குறி வைப்பதை விடுத்து காங்கிரஸைக் குறி வைக்கிறது மோடி அரசு: மனீஷ் திவாரி 

instead-of-targeting-china-centre-attacking-cong-persecution-of-ahmed-patel-is-example-of-vendetta-politics-manish-tewari

புதுடெல்லி

எல்லையில் ஆக்ரமித்து வரும் சீனா மீது குறிவைக்காமல் காங்கிரஸ் கட்சியின் மீது மத்திய அரசு குறிவைத்து வருகிறது. அகமெட் படேல் மீது தொடரப்பட்டு வரும் வழக்குகள் பழிவாங்கும் அரசியலுக்கு சிறந்த உதாரணமாகும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் இது குறித்துக் கூறும்போது, “சீனாவை குறிவைப்பதை விடுத்து மத்திய அரசு காங்கிரஸைக் குறிவைக்கிறது. அகமெட் படேல் மீதான அடக்குமுறை என்பது பழிவாங்கும் அரசியலின் சமீபத்திய உதாரணம்” என்றார்.

அகமெட் படேலை அமலாக்கத்துறையினர் குஜராத்தில் உள்ள மருந்து நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் தொடர்பாக 8 மணி நேரம் விசாரித்தனர். அகமெட் படேல் மீது நிதி மோசடிப் புகார் எழுந்துள்ளது. வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அகமெட் படேல் மீது புகார் எழுந்தது.

ஸ்டெர்லிங் பயோடெக்கின் சந்தேசரா குழு மீது ரூ.14,500 கோடி மோசடி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதில் அகமெட் படேல், இவரது மகன் பைசல் படேல், மருமகன் இக்பால் சித்திகி ஆகியோர் பெயரை கார்ப்பரேட் செயலதிகாரி ஒருவர் குறிப்பிட அமலாக்கத்துறையின் வலை இவர்கள் மீது விரிக்கப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Nstead of targeting China Centre attacking Cong; persecution of Ahmed Patel is example of vendetta politics: Manish Tewariசீனாமத்திய அரசுமோடிகாங்கிரஸ்அகமெட் படேல்மோசடி வழக்குபழிவாங்கும் அரசியல்பாஜகமனீஷ் திவாரி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author