சீனாவைக் குறி வைப்பதை விடுத்து காங்கிரஸைக் குறி வைக்கிறது மோடி அரசு: மனீஷ் திவாரி 

சீனாவைக் குறி வைப்பதை விடுத்து காங்கிரஸைக் குறி வைக்கிறது மோடி அரசு: மனீஷ் திவாரி 
Updated on
1 min read

எல்லையில் ஆக்ரமித்து வரும் சீனா மீது குறிவைக்காமல் காங்கிரஸ் கட்சியின் மீது மத்திய அரசு குறிவைத்து வருகிறது. அகமெட் படேல் மீது தொடரப்பட்டு வரும் வழக்குகள் பழிவாங்கும் அரசியலுக்கு சிறந்த உதாரணமாகும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் இது குறித்துக் கூறும்போது, “சீனாவை குறிவைப்பதை விடுத்து மத்திய அரசு காங்கிரஸைக் குறிவைக்கிறது. அகமெட் படேல் மீதான அடக்குமுறை என்பது பழிவாங்கும் அரசியலின் சமீபத்திய உதாரணம்” என்றார்.

அகமெட் படேலை அமலாக்கத்துறையினர் குஜராத்தில் உள்ள மருந்து நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் தொடர்பாக 8 மணி நேரம் விசாரித்தனர். அகமெட் படேல் மீது நிதி மோசடிப் புகார் எழுந்துள்ளது. வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அகமெட் படேல் மீது புகார் எழுந்தது.

ஸ்டெர்லிங் பயோடெக்கின் சந்தேசரா குழு மீது ரூ.14,500 கோடி மோசடி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதில் அகமெட் படேல், இவரது மகன் பைசல் படேல், மருமகன் இக்பால் சித்திகி ஆகியோர் பெயரை கார்ப்பரேட் செயலதிகாரி ஒருவர் குறிப்பிட அமலாக்கத்துறையின் வலை இவர்கள் மீது விரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in