

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, சாலை, ரயில்என அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. எனினும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு தடை இல்லை என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் சரக்கு வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆனால், வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்கு பெட்ரோபோல் – பெனாபோல் எல்லைவழியாக வரும் சரக்கு வாகனங்களை கடந்த மார்ச் முதலாக மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு பல்வேறு அறிவுத்தல்களை வழங்கியபோதிலும், மாநில முதல்வர்மம்தா பானர்ஜி அதற்கு செவிசாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு செல்லும் சரக்குவாகனங்களை அந்நாட்டு அரசுகடந்த 1-ம் தேதி முதல் அனுமதிக்கவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதாரணமாக, இருநாடுகளுக்கு இடையே கடந்தஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் மட்டும் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஆனால், நடப்பாண்டில் இதே காலக்கட்டத்தில் இரு தரப்பு வர்த்தகம் ரூ.3,126 கோடியாக குறைந்துள்ளது.