

எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் 1962-ம் ஆண்டில் போர் ஏற்பட்ட போது தேச ஒற்றுமைக்காகவும், இந்திய ராணுவ வீரர்களின் எழுச்சிக்காகவும் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அறைகூவல் விடுத்தார்.
பிரதமர் நேருவின் அறைகூவல் அப்போது பத்திரிகைகளில் விளம்பரமாக வெளிவந்தது. தேசப் பாதுகாப்புக்கான தொழிலதிபர்கள் கமிட்டி சார்பில் அந்த விளம்பரம் “நாங்கள் அவருடன் அணிவகுத்துச் செல்கிறோம்” என்ற தலைப்பில் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பண்டைய பாரம்பரியம் மற்றும் பெருமையுடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகள் ஒன்றிணைந்து ஒரு தேசம் உருவானது. அது
தற்போது ரத்தத்தாலும் இமயமலை பனிக்கட்டிகளின் கண்ணீராலும் சுத்தப்படுத்தப்படுகிறது. சீனப் படைகளின் தொடர்ச்சியான
மற்றும் தடையற்ற ஆக்கிரமிப்பின் காரணமாக நமது எல்லைகளில் ஒரு மோசமான நிலைமை எழுந்துள்ளது. நமது பிரதேசத்தின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நமக்கு வந்திருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டும்.
நாம் ஒரு சக்திவாய்ந்த மற்றும் நேர்மையற்ற எதிரியை சந்திக்க வேண்டும். எனவே, இந்த சூழ்நிலையை போதுமான மற்றும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள நமது பலத்தையும் சக்தியையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, நமது தேசத்தின் ஆற்றல், வளங்களை இதை நோக்கித் திருப்பவேண்டும்.
– ஜவஹர்லால் நேரு.
இந்த சூழ்நிலையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, ஏனெனில், அது 2 முறை ஒரு உன்னத மனதுடனும் உன்னதமான தலைமையுடனும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நேரு என்ற பெயரில் வரும் உத்வேகத்தைத் தவிர வேறு எந்த பெரிய சக்தியும் தேவையில்லை. எவ்வளவு பெரிய தடைகள் இருந்தாலும் அவருடன் இணைந்து அணிவகுத்து வெற்றி நோக்கி நடப்போம். நேரு வழிநடத்தும் போது, வெற்றி நம்முடை யது. இவ்வாறு அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
(கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா - சீனா போரின் போது, என்ன நடந்தது என்பது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் தமிழாக்கம்.)