கரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டெல்லி ஜூம்மா மசூதி திறப்பு

கரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டெல்லி ஜூம்மா மசூதி திறப்பு
Updated on
1 min read

டெல்லி ஜூம்மா மசூதி இன்று திறக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து, கடந்த மார்ச் 25-ம்தேதி முதல் வழிபாட்டு தலங்கள்மூடப்பட்டன.

ஊடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டாலும் வழிபாட்டுத் தலங்களை திறப்பது உட்பட சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூன் 8-ம் தேதிடெல்லியில் உள்ள ஜும்மா மசூதி திறக்கப்பட்டது.

எனினும், டெல்லியில் கரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், கடந்த 11-ம் தேதி ஜும்மா மசூதியை மறுபடியும் மூட உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பாதுகாப்பு முறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாலும் வைரஸ் மீதான அச்சம் குறைய ஆரம்பித்துள்ளதாலும் மக்கள் தொழுகை நடத்த வசதியாக, மசூதியை மீண்டும் திறப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜூம்மா மசூதி இன்று திறக்கப்பட்டது.

இம்மசூதியின் ஷாகி இமாம் சையது அகமது புகாரி கூறுகையில் “வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே மசூதி திறக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 10 மணிவரை திறந்திருக்கும். கரோனா தொற்று பரவாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மசூதியில் பின்பற்றி வைரஸ் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in