Last Updated : 04 Jul, 2020 12:41 PM

 

Published : 04 Jul 2020 12:41 PM
Last Updated : 04 Jul 2020 12:41 PM

சுமார்  ரூ.3 லட்சம் மதிப்புடைய தங்க முகக்கவசம்: புனே நகைப்பிரியரின் விநோதச் செயல்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க N-95 மாஸ்குகளை தேடிப்பிடித்து அணிபவர்களைப் பார்த்திருக்கிறோம் ஏனெனில் அது கரோனாவைத் தடுக்கவல்லது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றபடி அனைவரும் துணியாலான ஏதோ ஒரு மாஸ்க்கை அணிந்து செல்வது இனி புதிய இயல்புநிலையாக மாறி வருகிறது.

ஆனால் புனேயைச் சேர்ந்த ஷங்கர் குராதே என்ற நபர் ரூ.2.89 லட்சம் செலவில் தங்க முகக்கவசம் செய்து அணிந்துள்ளார்.

“இது மிகவும் மெல்லிய மாஸ்க், நுண் துளைகள் இருப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படாது. ஆனால் இந்த மாஸ்க் திறம்பட வேலை செய்யுமா என்பது எனக்குத் தெரியவில்லை” என்கிறார் ஷங்கர் குராதே.

இவர் உடல் முழுதுமே பல லட்ச ரூபாய் பெறுமான நகைகள் காணப்படுகின்றன. சமூகவலைத்தளத்தில் யாரோ ஒருவர் வெள்ளி முகக்கவசம் அணிந்திருந்தாராம், உடனே இவருக்கும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாம்.

இந்த தங்க மாஸ்க் ஐந்தரை பவுண்டு எடை கொண்டது. ஒருவாரத்தில் பொற்கொல்லர் இதனை தயாரித்துக் கொடுத்தாராம்.

“என் குடும்பத்துக்கே தங்கம் என்றால் ரொம்பப் பிடிக்கும் அவர்கள் கேட்டாலும் செய்து கொடுப்பேன். தங்க மாஸ்க் அணிந்தால் கரோனா வருமா வராதா என்பது எனக்குத் தெரியாது.” என்கிறார் ஷங்கர்.

சிறு வயது முதலே தங்க நகைகள் என்றால் இவருக்கு உயிர் என்பது அவரது 10 விரல்களிலும் காணப்படும் மோதிரம், வலது கையில் பெரிய தங்கக்காப்பு, கழுத்தில் மிகத்தடிமனான சங்கிலி, கைகளில் இதுதவிர பிரேஸ்லெட்கள் என்று அவர் வளைய வருவதிலிருந்து தெரியவருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x