Last Updated : 04 Jul, 2020 11:27 AM

 

Published : 04 Jul 2020 11:27 AM
Last Updated : 04 Jul 2020 11:27 AM

இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு கவுதம புத்தரின் கொள்கைளில் உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

அஷாதா பூர்ணிமா தினமான இன்று பேசிய பிரதமர் மோடி இன்றைய காலக்கட்டம் உலகிற்கு மிகவும் கடினமான காலக்கட்டம், உலகம் சந்தித்து வரும் பல சிக்கல்களுக்கு பிரச்சினைகளுக்குத் தீர்வு கவுதம புத்தரின் கொள்கைகளில் இருக்கிறது.

தர்மச்சக்கர தினமான இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சர்வதேச பவுத்தர்கள் கூட்டமைப்பு ஏற்பட்டு செய்த மெய்நிகர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலியில் பேசினார்.

பிரதமர் மோடி பேசியதாவது:

இன்றைய உலகம் பல சவால்களைச் சந்தித்து வருகிறது இதற்கான தீர்வுகள் கவுதம புத்தரின் உயரிய கொள்கைகளில் உள்ளன. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எந்தக் காலத்துக்கும் தீர்வாக புத்தரின் கொள்கைகள் அமைந்துள்ளன

பவுத்தம் மரியாதையை கற்பிக்கிறது. மக்களுக்கான மரியாதை, ஏழைகளுக்கான மரியாதை, பெண்களுக்கான மரியாதை, அமைதி மற்றும் அகிம்சைக்கான மரியாதை ஆகியவற்றை புத்தர் கற்பித்துள்ளார்.

பூமியைக் காப்பாற்ற உதவும் தத்துவங்கள் பவுத்தத்தில் உள்ளன. இதனைக் கொண்டு பூமியை நீடித்து இருப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள முடியும்.

நம்பிக்கையிலிருந்து பிறப்பது நோக்கம் குறிக்கோள் பற்றிய உணர்வாகும், புத்தர் இரண்டுக்கும் வலுவான தொடர்பை பார்க்கிறார்.

21ம் நூற்றாண்டு குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நம்பிக்கை என் இளம் நண்பர்களிடமிருந்து எனக்கு வந்தது. நம் நாட்டின் இளைஞர்கள். நம்பிக்கை, புதியன புகுத்தல், பரிவு ஆகியவற்றைப் பார்க்க வேண்டுமென்றால் இளைஞர்கள் வழிநடத்தலில் தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட்-அப் துறையை நாம் காணலாம்.

உலகளாவிய பிரச்சினைகளுக்கு பிரகாசமான இளம் மனங்கள் தீர்வு வழங்குகின்றன. இந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளது. பகவான் புத்தரின் சிந்தனைகளுடன் தொடர்பு படுத்திக் கொள்ளுங்கள் என்று இளைஞர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறென். அவை உங்களை ஊக்கப்படுத்தி முன்னேறிச் செல்ல உதவும்.

புத்தரின் சிந்தனைகள் பிரகாசம் அளிக்கட்டும். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வழங்கட்டும். அவரது சிந்தனைகள் நம்மை நல்வழிப்படுத்தட்டும்.

அஷாதா பூர்ணிமாவான இன்று அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் பரிவையும் கருணையையும் வேண்டும் நாள். செயலிலும் சிந்தனையிலும் எளிமையைக் கொண்டாடுவோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x