இந்த ஆண்டில் 2,432 முறை எல்லையில் துப்பாக்கிச் சூடு: பாகிஸ்தானிடம் இந்தியா கண்டனம்

இந்த ஆண்டில் 2,432 முறை எல்லையில் துப்பாக்கிச் சூடு: பாகிஸ்தானிடம் இந்தியா கண்டனம்
Updated on
1 min read

எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பாகிஸ்தானிடம் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 2003-ம்ஆண்டின் போர்நிறுத்த ஒப்பந்தங்கள மீறி இந்தியப் பகுதிகளை நோக்கி அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவச்செய்யும் நோக்கத்தில், நமதுபடையினரை திசைதிருப்புவதற்காக இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் ஜூன்மாதம் வரை 2,432 முறைகளுக்கும் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவங்களில் 14 இந்தியர்கள் இறந்துள்ளனர். 88 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்காக பாகிஸ்தானிடம் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மட்டுமின்றி எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயலுக்கும், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் மூலம் கண்டனமும் கவலையும் தெரிவிக்கப்பட்டதாக டெல்லியில் இந்திய அதிகாரிகள்தெரிவித்தனர். அதே நேரம் கண்டனம் தெரிவிக்கப்பட்டபோதும் பாகிஸ்தான் தனது அத்துமீறிய தாக்குதலை நிறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in