Published : 04 Jul 2020 08:17 AM
Last Updated : 04 Jul 2020 08:17 AM

சமாஜ்வாதிக் கட்சியை பிளவுபடுத்த காய்நகர்த்தும் யோகி: முலாயம் சிங் யாதவ் மருமகள் பாஜகவில் இணைகிறார்?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரிய கட்சியான சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ்வின் இளைய மருமகள் அபர்ணா பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவருக்கு உ.பி. மாநில போலீஸ் பாதுகாப்பு வழங்கியதையடுத்து இந்தச்செய்தி வெளியாகியுள்ளது. அகிலேஷ் யாதவ்வின் சகோதரர் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா ஆவார்.

இவர் பசு பராமரிப்பு மையம் நடத்தி வருவதோடு சமீபகாலமாக ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். 2017 சட்ட மன்றத் தேர்தலில் சமாஜ்வாதியில் போட்டியிட்டு தோல்வி தழுவினார். அகிலேஷ் யாதவின் அரசியல் இவருக்கு எரிச்சலை மூட்டுவதாகவும் அவருக்கு எதிராக காய்களை நகர்த்தி வருவதாகவும் உ.பி. சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன.

இந்நிலையில் அபர்ணாவுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இவர் பாஜக சார்பாகப் போட்டியிடலாம் என்று அங்கு கணிப்புகள் வலுவாக எழுந்துள்ளன.

இது தொடர்பாக அபர்ணா கூறும்போது, தான் இன்னும் சமாஜ்வாதி கட்சி அடிப்படை உறுப்பினர்தான் என்றும் கொரோனா தடுப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறினார்

மேலும் அவர் கூறும்போது, ‘முலாயம் சிங் எதற்காகக் கட்சித் தொடங்கினாரோ அதற்கு எதிராகவே சமாஜ்வாதி தற்போது செயல்படுகிறது. கட்சியில் பெண்களுக்கான முக்கியத்துவமும் இல்லை.’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x