ராகுல் காந்தியின் அமேதி தொகுதிக்குட்பட்ட கிராமத்தை தத்தெடுத்தார் மத்திய அமைச்சர்

ராகுல் காந்தியின் அமேதி தொகுதிக்குட்பட்ட கிராமத்தை தத்தெடுத்தார் மத்திய அமைச்சர்
Updated on
1 min read

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதிக்குட்பட்ட பரூலியா கிராமத்தை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தத்தெடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து மேம்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி எம்.பி.க்கள் விருப்பப்பட்ட கிராமங்களை தத்தெடுத்து நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக மாவட்ட தலைவர் துர்கேஷ் திவாரி கூறும்போது, “அமேதி மக்களவை தொகுதிக்குட்பட்ட கவுரிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதியின் கீழ் வரும் பரூலியா கிராமத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தத்தெடுத்துள்ளார்” என்றார்.

கோவா மாநில முன்னாள் முதல்வரான பாரிக்கர், உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல இன்று அமேதி தொகுதிக்கு செல்லும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கிராம மக்களுக்கு 50 ஆயிரம் பழ மரக் கன்றுகளை பரிசாக வழங்குகிறார்.

ராகுல் காந்தியை எதிர்த்து இரானி போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும் அமேதி தொகுதிக்கு அடிக்கடி சென்று மக்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in