கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்பு

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்பு
Updated on
1 min read

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகாவில் நடந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதையடுத்து, தினேஷ் குண்டு ராவ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மார்ச் மாதம் டி.கே.சிவகுமார் அம்மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். கரோனா வைரஸ் பரவலின் காரணமாக அவர் தலைவராக பொறுப்பேற்கும் விழா நடைபெறவில்லை.

இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் டி.கே.சிவகுமார் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து சதீஷ் ஜார்கிஹோளி, ஈஸ்வர் கண்ட்ரே, சலிம் அகமது ஆகிய மூவரும் செயல் தலைவர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் தலைவர் தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.கே.சிவகுமாரின் பதவியேற்பு விழாவை நேரலையாக காங்கிரஸார் பார்க்கும் வகையில் கர்நாடகா முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் காணொலி காட்சி மூலம் திரையிடப்பட்டது.

புதிதாக பதவியேற்ற டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in