

இந்தியாவில் டிக்-டாக் மீது விதிக் கப்பட்ட தடையால், அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ்-க்கு ரூ.45,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என சீன அரசு ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதி யில், கடந்த 15-ம் தேதி இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற் பட்டுள்ளது. எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக் கணிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனங்களின் செல்போன் செய லிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் தேசப் பாது காப்பு, தனிநபர் அந்தரங்க உரிமை ஆகிய காரணங்களுக்காக சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளான டிக்-டாக், ஷேர்-இட், யுசி புரவுசர், பைடு மேப், ஹலோ, எம்ஐ கம்யூனிட்டி, கிளப் பேக்டரி, வீ-சாட், யுசி நியூஸ் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை தடை விதித்தது.
இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு கேடு விளை விக்கும் நடவடிக்கைகளுக்கு இவற்றில் இடம்பெறும் தகவல்கள் பயன்படுத்தப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கம் தெரி வித்துள்ளது.
இந்தியாவின் இந்த நட வடிக்கை, உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித் தது. இதேபோல சீன அரசு ஊடக மான ‘குளோபல் டைம்ஸ்’ இதழி லும் செய்திக் கட்டுரை வெளி யானது. அதில் கூறியிருப்பதாவது:
சீன செயலிகளை தடை செய் யும் இந்திய அரசின் முடிவால் டிக்-டாக், ஹலோ செயலி ஆகியற்றின் தாய் நிறுவனமான ‘பைட்-டான்ஸ்’-க்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் 'சென்சார் டூவர்' நிறுவனம் அளித் துள்ள புள்ளிவிவரப்படி, கடந்த மே மாதம் டிக்-டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட் டுள்ளது.
இரு மடங்கு பதிவிறக்கம்
அமெரிக்காவில் பதிவிறக் கம் செய்யப்பட்டதை விட இரு மடங்கு இந்தியாவில் பதிவிறக் கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலை யில் இந்திய அரசு தடை விதித்த தால், சீன முதலீட்டாளர்கள் மற் றும் வர்த்தகர்களின் நம்பிக்கை யில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
டிக்-டாக் செயலிக்கு முக்கிய வருவாய் ஆதார நாடாக இந்தியா இல்லாவிடினும் அந்த செயலியை அதிகம் பதிவிறக்கம் செய்த முன் னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய சந்தையில் பைட்-டான்ஸ் சுமார் ரூ.7,473 கோடி முதலீடு செய்துள்ளது. இத்தடையால் இந்தியா வில் இந்த நிறுவனத்தின் வர்த்தகத் தில் கடும் பாதிப்பு ஏற்படும். இந்த இழப்பானது மற்ற அனைத்து செயலிகளுக்கும் ஏற்படும் ஒட்டு மொத்த இழப்பை விட அதிகமா கவே இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.