Published : 02 Jul 2020 07:51 PM
Last Updated : 02 Jul 2020 07:51 PM

நாடுமுழுவதும் கரோனா பரிசோதனை; விரைவில் 1 கோடி எண்ணிக்கையை தொடும்

நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனை எண்ணிக்கை, விரைவில் ஒரு கோடியை எட்ட உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நோய் கண்டறியும் சோதனைக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்தி வருவதன் மூலம், இன்றைய தேதி வரை, 90,56,173 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 768 அரசு ஆய்வகங்கள் மற்றும் 297 ஆய்வகங்கள் உட்பட, நாடு முழுவதும் மொத்தம் 1065 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

தினசரி பரிசோதனை எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும், 2,29,588 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து தடைகளையும் மத்திய அரசு அகற்றியதே இதற்குக் காரணம். மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள், கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதன் மூலம் நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனை எண்ணிக்கை, விரைவில் ஒரு கோடியை எட்டவுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x