

நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு மத்திய அரசு இலவச உணவுப்பொருட்களை வழங்கும் என்று பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றும் உரையில் தெரிவித்த சில நிமிடங்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘மேற்கு வங்கம் இலவச ரேஷன் பொருட்களை ஜூன் 2021 வரை வழங்கும்’ என்று ஒருபடி மேலே சென்றார்
“மேற்கு வங்கம் ஜூன் 2021 வரை இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கும். ரேஷனின் தரம் மத்திய அரசை விட நன்றாக இருக்கும். மேற்கு வங்கத்தில் 60% மக்களுக்குத்தான் மத்திய அரசின் ரேஷன் பொருட்கள் கிடைக்கிறது.” என்றார் பானர்ஜி.
சீனாவின் 59 செயலிகளை தடை செய்தது பற்றி மம்தா கூறும்போது, “சில செயலிகளை தடை செய்வதால் தீர்வு ஏற்பட்டு விடாது. சீனாவுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அரசுதான் அதை முடிவு செய்ய வேண்டும். பிரதமர் சொல்வது போல் பதிலடி நாம் இன்னும் கொடுக்கவில்லை” என்றார் மம்தா பானர்ஜி.