

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 100 சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா தானம் அளிக்க வரிசையில் காத்திருந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மஞ்சீத் சிங் என்ற சிஆர்பிஎஃப் தலைமைக் காவலர் இந்த தைரிய ஆத்மாக்களில் ஒருவர். அவர் கூறும்போது, “நான் ஜூன் 27ம் தேதியன்று பிளாஸ்மா தானம் செய்தேன். என்.டி.டிவி மூலம் வென்ட்டிலேட்டரில் இருந்த ஒரு கரோனா பாதிப்பு பெண்மணி பற்றி அறிய நேர்ந்தது. நான் டெல்லி சர் கங்காராம் மருத்துவமனைக்குச் சென்று பிளாஸ்மா தானம் செய்தேன்.
எனக்கு வைரஸ் தொற்றியிருப்பது ஏப்ரல் 29ம் தேதி தெரியவந்தது. ஆனால் அது என்னை மனச்சோர்வில் ஆழ்த்த நான் அனுமதிக்கவில்லை, நேர்மறையான எண்ணங்களோடு மருத்துவர்கள் அறிவுரையைப் பின்பற்றினேன்” என்றார்.
என்.டி.டிவிக்கு இன்னொரு ஹெட் கான்ஸ்டபிள் கணேஷ் குமார் கூறும்போது, ‘உயிரைக்காப்பாற்றும் என்றா ஏன் பிளாஸ்மா தானம் செய்யக் கூடாது, இது ஒரு நல்ல காரியம்” என்றார்.
ஆர்.டி.யாதவ் என்ற சிஐஎஸ்எஃப் தலைமைக் காவலர் ஆர்.டி.யாதவ், கூறும்போது, “ஒருநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் எனக்கு ஊக்கமளித்தார், என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டது குணமடைந்து தேறியுள்ளேன்” என்றார்.
இவர்களில் 100 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.
மொத்தம் 2000 சிஆர்பிஎஃப் ராணுவ வீரர்களுக்கு கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 1,400 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்.
ஏற்கெனவே மீண்ட வீரர்கள் டெல்லி, குஜராத், ஹரியாணாவில் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.
பிளாஸ்மா தானம் அளிப்பதற்கு 14 நாட்களுக்கு முன்பாக இவர்களுக்கு கரோனா பரிசோதனை நெகெட்டிவ் என்று காட்ட வேண்டும்.
இந்தியாவில் 5.67 லட்சம் கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, இதில் 16,893 பேர் பலியாகியுள்ளனர்.