Published : 30 Jun 2020 08:32 PM
Last Updated : 30 Jun 2020 08:32 PM

இன்று புதிதாய் 131 பேருக்குக் கரோனா; 127 ஹாட் ஸ்பாட்கள்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளாவில் இன்று புதிதாகக் கரோனா தொற்று 131 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா திருவனந்தபுரத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:

''மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 26 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 17 பேர், கொல்லம் மாவட்டத்தில் 12 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் ஒன்பது பேர், காசர்கோடு மாவட்டத்தில் எட்டு பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஐந்து பேர், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தலா நான்கு பேர், கோட்டயம் மாவட்டம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த தலா ஒருவர் இன்று கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் ஆவர்.

இன்று நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களில், 65 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள் (குவைத் 25, ஐக்கிய அரபு எமிரேட் 12, சவுதி அரேபியா 11, ஓமன் 6, கத்தார் 6, பஹ்ரைன் 1, மால்டோவா 1, ஆப்பிரிக்கா 1, எத்தியோப்பியா 1 & கஜகஸ்தான் 1) மற்றும் பிற மாநிலங்களிலிருந்து 46 பேர் திரும்பி வந்தவர்கள் (தமிழ்நாடு 13, மகாராஷ்டிரா 10, டெல்லி 5, உத்தரப் பிரதேசம் 5, கர்நாடகா 4, பிஹார் 2, ராஜஸ்தான் 2, ஹரியாணா 1, உத்தரகாண்ட் 1, இமாச்சலப் பிரதேசம் 1, பஞ்சாப் 1 & அருணாச்சலப் பிரதேசம் 1) ஆவர்.

10 உள்ளூர் தொற்றுப் பரவல்

மலப்புரம் மாவட்டத்தில் 4, பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இருந்து தலா 2, ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தலா 1 தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களும் அடங்குவர்.

மலப்புரம் மாவட்டத்தில் 23 நோயாளிகள், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தலா 7 பேர், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களைச் சேர்ந்த தலா 6 பேர், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா 4 பேர், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இருந்து தலா 2 பேர் ஆகியோர் இன்று தொற்றிலிருந்து மீண்டவர்கள்.

இதுவரை, 2,304 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 2,112 நோயாளிகள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் 1,81,876 பேர் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில், 2,781 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 330 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,076 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மொத்தம் 2,31,570 மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 3,872 மாதிரிகள் முடிவுகளுக்குக் காத்திருக்கின்றன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, சுகாதார ஊழியர்கள், விருந்தினர் தொழிலாளர்கள் மற்றும் அதிக சமூகத் தொடர்புகள் உள்ளவர்கள் போன்ற முன்னுரிமைக் குழுக்களிடமிருந்து 47,994 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, அதில் 46,346 மாதிரிகள் நோய்த்தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

19 புதிய இடங்கள் இன்று ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டன, 10 இடங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. கேரளாவில் இப்போது 127 ஹாட் ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x