Published : 30 Jun 2020 10:44 AM
Last Updated : 30 Jun 2020 10:44 AM

சந்திரயான்-3: அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்: ஜிதேந்திர சிங்

புதுடெல்லி

சந்திரயான்-3 விண்வெளிக் கலம் அடுத்த ஆண்டு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்துவதில், இஸ்ரோ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ரஷ்ய நிறுவனத்துக்கும், இஸ்ரோவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘ககன்யான்’ திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் என்பதால், மிகவும் எச்சரிக்கையுடன், அதே நேரம் துரிதமாகவும் இதற்கான பணிகள் இஸ்ரோவில் நடந்து வருகின்றன. இதற்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.

அப்போது, இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான்” கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்படாது என்றும் அதன் தயாரிப்புப் பணிகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் விண்வெளித் துறையின் முக்கிய சாதனைகள் மற்றும் எதிர்காலத்திற்காக திட்டமிடப்பட்ட சில முக்கியமான பணிகள் குறித்து விளக்கமளித்த ஜிதேந்திர சிங், கோவிட்-19 தொற்றுநோயால், ரஷ்யாவில் நான்கு இந்திய விண்வெளி வீரர்களின் பயிற்சி நிறுத்தப்பட வேண்டியிருந்தது, ஆயினும் இஸ்ரோவின் தலைவர் மற்றும் விஞ்ஞானக் குழுவின் கருத்து என்னவென்றால், பயிற்சித் திட்டத்திலும், காலக்கெடுவைத் தொடங்குவதிலும் வசதியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வரும் 2022ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டுவிழாவிற்கு முன்னர், இந்தப் பணி முடிவடையும் நோக்கில் விண்வெளி வீரர்களின் பயிற்சி இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் திட்டமிட்டபடி விண்கலம் செலுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இஸ்ரோ நடவடிக்கைகளில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான அமைச்சரவை முடிவை விரிவாகக் கூறிய ஜிதேந்திர சிங், “இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe)” என்ற ஒழுங்குமுறை அமைப்பு நிறுவப்பட உள்ளது என்றார். இது தனியார் விண்வெளி வீரர்களுக்கு ஒரு நிலையான இடத்தை வழங்கவும், அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் உதவும், என்றார்.

ஜிதேந்திர சிங் கூறுகையில், நமது விண்வெளிப் பயணங்களின் திறன் மற்றும் வளங்களை மேம்படுத்துவதுடன் தனியார் விண்வெளி வீரர்களின் அதிகப் பங்களிப்பும், இடைவெளிக்காக வேலைத் தேடி இந்தியாவுக்கு வெளியே செல்லும் நிபுணர்கள் மற்றும் திறமையான விண்வெளி விஞ்ஞானிகளை ஊக்குவிக்காமல் இருக்க உதவும்.

சந்திரயான்-3 விண்வெளிக் கலம் குறித்து ஜிதேந்திர சிங் கூறுகையில், இன்றைய நிலவரப்படி அடுத்த ஆண்டு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஒரு லேண்டர், ரோவர் மற்றும் ஒரு உந்துவிசை அமைப்புத் தொகுதிகளை நிலவுக்குக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும், முந்தைய சுற்றுப்பாதை முழுமையாகச் செயல்படுவதால் அதற்குப் புதிய சுற்றுப்பாதை இருக்காது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x