பள்ளிகள் மூடப்பட்டதால் இணையவழிக் கல்வி: சாத்தியக்கூறு பற்றி நிதிக்குழு ஆலாசனை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

என்.கே.சிங் தலைமையிலான நிதிக்குழு இன்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போதைய பெருந்தொற்றுப் பரவல் சூழலில், ஆன்லைன் வகுப்புகள், கல்வி கற்பிக்க இதர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட புதிய கற்பிக்கும் முறைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை பற்றி விவாதிப்பதற்காக இக்கூட்டம் அழைக்கப்பட்டது. கல்வித்துறையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதிக்குழுவிடம் திருத்தப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கும் அவசியம் பற்றி, நிதிக்குழு ஏற்கனவே, பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித்துறை ஆகியவற்றுடன் விரிவான விவாதம் நடத்தியுள்ளது.

குறிப்பாக கோவிட்-19 காலத்தில், கல்வி பற்றிய பரிந்துரைகளை 2020-21 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் அளிப்பது தொடர்பாக, விவாதிக்கும் நோக்கத்துடன் நிதிக்குழு இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்காக, பின்வரும் விஷயங்களில், நிதிக்குழுவுக்குத் தெளிவு தேவைப்படுகிறது. கீழ்கண்ட் அம்சங்கள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன.

* வரைவு தேசியக் கல்விக் கொள்கையின் கீழ், தொடக்கக் கல்விக்கு முந்தைய வகுப்புகள் பற்றிய அளவிடக் கூடிய முடிவுகள் மற்றும் தலையீடுகள், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான கால வரையறை.

* மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக குழு அளித்துள்ள 7 குறியீடுகளைக் கண்காணிப்பது.

* எப்சி- 15 விருது காலத்துக்கான கல்வித் திறனைக் கண்பாணிப்பதற்கான தர அளவீடுகள்

·* கல்வியின் இந்த 7 சுட்டுப்பொருள்கள் பற்றி மாநில வாரியாக இலக்குகளை அமைச்சகம் தயாரித்துள்ளது. 2021-22 முதல் மாநிலங்களுக்கு ஊக்குவிப்பு வழங்க அமைச்சகம் ஏதாவது முன்னேற்பாடு நடவடிக்கைகளை தயாரித்துள்ளதா? எனக்காணுதல்.

* கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புக்கு எதிராகப் போராட அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 20 லட்சம் கோடி நிதிச் சலுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்வி தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை குழு கருத்தில் கொண்டுள்ளது;

* கொவிட் காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த ஆன்லைன் கல்வி முறைகள்

* இணையதள வசதி இல்லாதவர்களுக்கு கல்வி சென்றடைய சுவயம் பிரபா டிடிஎச் சேனல்களின் ஆதரவு. பள்ளிக்கல்வித் துறைக்கென ஏற்கனவே 3 சேனல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது, மேலும் 12 சேனல்கள் சேர்க்கப்படும்.

* நிபுணர்கள் வீடுகளில் இருந்தவாறு ஸ்கைப் வழியாக. இந்தச் சேனல்களில் நேரடியாகக் கலந்துரையாடும் அமர்வுகளை ஒளிபரப்புவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

* மேலும், இந்தக் கல்வி அலைவரிசைகள் அதிக அளவில் சென்று சேரும் வகையில், டாடா ஸ்கை, ஏர்டெல் போன்ற தனியார் டிடிஎச் இயக்குபவர்களுடன் ஒப்பந்தம்.

* கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை சுவயம் பிரபா சேனல்களில் ஒளிபரப்ப, இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஒருங்கிணைப்பு ( தினசரி 4 மணி நேரம்)

* மார்ச் 24 முதல் இன்று வரை திக்ஷா தளத்தை 61 கோடி பேர் பார்த்துள்ளனர்.

* இ-பாடசாலா தளத்தில் 200 புதிய பாடப் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

* கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பங்குடன் கல்வி

ஆகிய அம்சங்கள் தொடர்பாக நிதிக்குழு ஆலோசனை நடத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in