டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் வரவேற்பு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடைவிதித்து பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுபோல் இன்னும் வீரியமுள்ள நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும் என அந்த கட்சி தெரிவித்துள்ளது,

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சறுத்தலாக இருப்பதாகக் கூறி ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடை செய்தது. இந்த தடையில் புகழ்பெற்ற டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இடம் பெற்றிருந்தன

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். பிளாட்பார்ம்களில் மொபைல் செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடி வெளிநாடுகளில் இருக்கும் சர்வர்களுக்கு விற்பகப்படுவதாக எங்களுக்குப் புகார் வந்தன.

இந்தத் தரவுகள் சேகரிப்பு , புதிய தகவல்களைப் பெறுவதற்காக முந்திய தரவுகளை அலசுவது ஆகியவற்றை தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும், தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும்.

இந்த செயலிகளுக்கு தடை விதிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையவழிக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைந்த மையம் பரிந்துரையின் அடிப்படையில் தடை செய்யப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அகமது படேல்: கோப்புப்படம்
அகமது படேல்: கோப்புப்படம்

இந்த 59 செயலிகளில் புகழ்பெற்ற வீசாட், பிகோ லைவ், ஹெலோ, லைக்கி, கேம்ஸ்கேனர், டிக்டாக், ஷேர்இட், யுசிபிரவுசர்,விகோ வீடியோ, எம்ஐ வீடியோ கால், கிளாஸ் ஆப் கிங்ஸ், கிளப் பேக்டரி உள்ளிட்ட பல்வேறு செயலிகள் அடங்கும்

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான அகமது படேல் ட்விட்டரில் கூறுகையில் “ எல்லையில் சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இருக்கும் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு வரவேற்புக்குரியது. இன்னும் வீரியமுள்ள, தீவிரமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணிஷ் திவாரி ட்விட்டரில் கூறுகையில் “ சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. பிஎம் கேர்ஸ் நிதிக்கு சீன தொலைத்தொடர்பு மற்றும் சீந நிறுவனங்களிடம் இருந்து பெற்ற நன்கொடை நல்லதா கெட்டதா” எனத் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in