

தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் முகமது அலிக்கு நேற்று கரோனா வைரஸ் தொற்றுஉறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அமைச்சருடன் பாதுகாப்புப்பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு கரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஈடல ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த முறை ஊரடங்கில் தளர்வை அறிவித்ததால், நகர்ப்புறங்களில் கரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி விட்டது. எனினும், நாட்டில் கரோனா மரணம் 3 சதவீதமாக உள்ளது. இது தெலங்கானாவில் 1.7 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதுவரை 240 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்” என்றார்.