

இந்திய, சீன ராணுவ உயரதி காரிகள் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
கடந்த மே மாத தொடக்கத் தில் கிழக்கு லடாக் பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. அவர் களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக கடந்த மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் ராணுவ வீரர் களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதன்பின் கடந்த 6-ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரி கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன் பாடு எட்டப்பட்டு படைகளை வாபஸ் பெற சீனா ஒப்புக் கொண்டது. கல்வான் பள்ளத் தாக்கில் முதலில் பின்வாங்கிய சீன வீரர்கள், அடுத்த சில நாட்களில் மீண்டும் அதே பகுதியில் முகாமிட்டனர்.
இதன்காரணமாக கடந்த 15-ம் தேதி இருநாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதைத் தொடர்ந்து காணொலிக் காட்சி மூலம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரமதர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் எழுந்தது. கடந்த 22-ம் தேதி இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பதற்றத்தை தணித்து படைகளை வாபஸ் பெற சீனா ஒப்புக் கொண்டது. எனினும் இருதரப்பும் எல்லையில் படைகளையும் ஆயுதங்களையும் குவித்து வைத்திருப்பதால் அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.
இந்த பின்னணியில் இந் திய, சீன ராணுவ உயரதிகாரி கள் இன்று மீண்டும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கு முன்பு நடந்த 2 கூட்டங்களும் லடாக்கின் சீன எல்லைப் பகுதியில் நடைபெற்றன. இந்த முறை லடாக்கின் இந்திய எல்லைப் பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று ராணுவ வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.