Published : 29 Jun 2020 08:57 PM
Last Updated : 29 Jun 2020 08:57 PM

சிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் தம்பதி கதறல்: உ.பி. அரசு மருத்துவமனைச் சம்பவத்தினால் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசம் கன்னவ்ஜ் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இளம் தம்பதியினர் இறந்த தங்களது ஒரு வயதுக் குழந்தையை அணைத்தபடி கதறிய காட்சிப் பலரது நெஞ்சையும் பதறச் செய்தது, இந்தக் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் கழுத்து வீக்கம் ஏற்பட அரசு மருத்துவமனைகு அரக்கப்பறக்க குழந்தையை எடுத்து வந்தனர் தம்பதியினர். ஆனால் குழந்தையை தொட மறுத்த மருத்துவர்கள் கான்பூருக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினர், அங்கிருந்து கான்பூர் 90கிமீ தூரம்.

ஆனால் இதனை மருத்துவர்கள் மறுத்தனர். மாலை 4.45 மணியளவில் இந்தத் தம்பதியினரின் அல்லாட்டத்தையும், இறந்த குழந்தையை அணைத்தபடி தாயும் தந்தையும் கதறிய காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்கியது, இதனை வீடியோ பிடித்தனர் பலர்.

தம்பதியின் பெயர் ஆஷாதேவி, பிரேம்சந்த், 1 வயது குழந்தையின் பெயர் அனுஜ். இருவரும் சிகிச்சை மறுக்கப்பட்டதால் இறந்த குழந்தையை அணைத்தபடி கதறிய காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலானது. இன்னொரு வீடியோ படத்தில் குழந்தைக்கு எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது போல் பதிவானது.

இது தொடர்பாக பெற்றோர் கூறும்போது, “பலரும் செல்போனில் படம் பிடித்ததையடுத்து உடனே அனுமதித்தனர். அதற்கு முன்பாக என் குழந்தையைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை. 30 நிமிடங்கள் அல்லடினோம். தொடர்ந்து கான்பூருக்குக் கொண்டு செல்லுங்கள் என்றே கூறினர். நான் ஏழை, என்னிடம் பணம் இல்லை.” என்று பிரேம் சந்த் தனியார் சேனல் ஒன்றில் கூறினார்.

“குழந்தையின் கழுத்து வீங்கியது, எங்களை 30-40 நிமிடங்கள் அலைக்கழித்தனர் பிறகு பலரும் செல்போனில் படம் எடுக்க பயந்து போய் அட்மிட் செய்தனர். ஆனால் தாமதம் செய்ததால் குழந்தை இறந்தது” என்கிறார் தாயார் ஆஷா தேவி.

ஆனால் அலட்சியம் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகமும் கன்னவ்ஜ் மாவட்ட நிர்வாகமும் மறுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x