

கேரளா திறம்பட கோவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்துவதாக பெயர் எடுத்து வரும் நிலையில், திங்களன்று 121 பேருக்கு புதிதாகக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2057 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இறந்து போன ஒருவரின் மாதிரி கரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்துள்ளது.
கரோனா தொற்று புதிதாக ஏற்பட்டவர்களில் 78 பேர் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள். 26 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 5 பேருக்கு தொடர்பு மூலம் கரோனா தொற்றியுள்ளது
சிஎஸ்ஐஎஃப்- ஐச் சேர்ந்தவர்கள் 9 பேர், மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 3 பேருக்கு கரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்துள்ளது, என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக 11வது நாளாக கரோனா தொற்றுக்கல் நூற்றுக்கும் மேல் சென்றுள்ளது. 79 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்
தமிழ்நாட்டிலிருந்து கேரளா சென்ற ஒரு நபர் ஜூன் 24ம் தேதி மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூன் 24ம் தேதி இறந்து போனார். அவரது மாதிரி கரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்தது.
மாவட்ட வாரியாக தொற்று எண்ணிக்கையை வெளியிட்ட பினராயி விஜயன், திருச்சூரில் அதிகபட்சமாக 26 தொற்றுக்கள் ஏற்பட்டுளன. கண்ணூரில் 14 பேருக்கும், மலப்புரம், பத்தனம்திட்டாவில் முறையே 13 பேருக்கும், பாலக்காட்டில் 12 பேருக்கும், கொல்லத்தில் 11 பேருக்கும் கோழிக்கோட்டில் 9 பேருக்கும், ஆலப்புழா, எர்ணாக்குளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், காசர்கோடு, திருவனந்தபுரத்தில் தலா 4 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தேதியில் கேரளாவில் 118 கரோனா ஹாட்ஸ்பாட்கள் உள்ளன.
மலப்புரம் பொன்னனி தாலுகாவில் கோவிட் தொற்று அதிகரிப்பின் காரனமாக திங்கல் மாலை 5 மணி முதல் ஜூலை 6ம் தேதி வரை மூன்று லாக்டவுன் உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும்.
எடப்பல், பொன்னனி பகுதிகளில் பெரிய அளவில் கரோனா டெஸ்ட்டிங்கும் இருக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.