Last Updated : 29 Jun, 2020 08:02 AM

 

Published : 29 Jun 2020 08:02 AM
Last Updated : 29 Jun 2020 08:02 AM

உ.பி.யில் வீணான 160 சொகுசு வாகனங்களின் பதிவு எண்ணை திருடிய வாகனங்களில் பொருத்தி விற்பனை: தமிழகம் முதல் காஷ்மீர் வரை படை அமைத்து தேடும் போலீஸார்

கோப்புப் படம்

புதுடெல்லி

நாடு முழுவதிலும் வெள்ளம், விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறுகாரணங்களால் புதிய வாகனங்களும் வீணாவது வழக்கம். அந்தவகையில், கடந்த வருடம் காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பல சொகுசு வாகனங்கள் வீணாகின. இதில் சுமார் 130சொகுசு வாகனங்கள் மிகக்குறைந்த விலைக்கு வாங்கப்பட்டன. பிறகு அவற்றின் இயந்திரம் மற்றும் பதிவு எண்களை,திருடப்பட்ட வேறு வாகனங்களில்பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலான வாகனங்களின் பதிவை வேறு மாநிலப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு மாற்றி விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த செயல் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெள்ளம், தீ விபத்து, விபத்து உள்ளிட்ட காரணங்களால் வீணாகப்போகும் வாகனங்கள் மிகவும்குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றன.

இதுபோல உத்தரபிரதேசத்தில் திருடப்பட்ட சுமார் 160 வாகனங்களில் சொகுசு வாகன பதிவெண்களை பயன்படுத்தி விற்பனை செய்த ஒரு கும்பல் அக்காவல் துறை கண்காணிப்பில் சிக்கியுள்ளது. தேசிய அளவில் செயல்படும் இந்தகும்பலை சேர்ந்தவர்களை பிடிக்கஉத்தரபிரதேச காவல் துறையின்சார்பில் 7 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உத்தரபிரதேச காவல்துறை உயர் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, "லக்னோவின் இந்திரா நகரில் எஸ்யூவி வாகனத்தில் ஒருவர் கொல்லப்பட்டு கிடந்தார். அதன் விசாரணையில் அந்தவாகனம் இதுபோன்ற ஒரு கும்பலிடம் இருந்து பெறப்பட்டிருப்பது தெரிந்தது. இந்த தகவல்களின் அடிப்படையில் சென்னை, பாட்னா, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விசாரணை நடத்த ஏழு தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன" என்றனர்.

தேசிய அளவில் செயல்படும் இந்த கும்பலால் திருடப்பட்ட வாகனங்கள் பெரும்பாலும் பிறமாநிலங்களுக்கு அதன் பதிவு எண்களை மாற்றி விற்கப்படுகின்றன. எனவே, அதுபோல மாநிலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் முதல் உரிமையாளர்களை அடையாளம் கண்டு உத்தரபிரதேச காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தகவலை அறிந்த அக்கும்பலின் முக்கிய தலைவர்கள் பலரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களில் இன்னும் ஒருவர்கூட உ.பி. காவல் துறையினரிடம் சிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x