

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மச்சில் பகுதியில் 3 இளைஞர்களை போலி என்கவுன்ட்டர் மூலம் கொன்ற ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 5 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனையை ராணுவ நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் உள்ள மச்சில் பகுதியில் கடந்த 2012 ஏப்ரல் மாதம் 3 இளைஞர்களை வேலை வாங்கித் தருவதாக கூறி கடத்திச் சென்ற ராணுவத்தினர், தீவிரவாதிகள் எனக் கூறி கொன்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட போலி என்கவுன்ட்டர் வழக்கில் 2 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 6 ராணுவ வீரர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை வடக்கு ராணுவ பிரிவின் ஜெனரல் ஆபிசர் கமான்டிங் இன் சீப் டி.எஸ். ஹூடா நேற்று உறுதி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, கேப்டன் உபிந்தர், கர்னல் பதானியா, ஹவில்தார் தேவேந்திர குமார், லான்ஸ் நாயக் லக்மி, லான்ஸ் நாயக் அருண் குமார், ரைபிள் மேன் அப்பாஸ் ஹுசைன் ஆகி.
ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப் படுகிறது என வடக்கு ராணுவ பிரிவின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.