

காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டால், எல்பிஜி சிலிண்டர் சப்ளை பாதிக்கப்படாமல் இருக்க, 2 மாதங்களுக்கு தேவையான சிலிண்டர்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் கடந்த 23-ம் தேதி உத்தரவிட்டார்.
இதுபோல கந்தர்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், “அமர்நாத்யாத்திரை காரணமாக மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஐடிஐ கட்டிடங்கள் காலி செய்யப்பட வேண்டும். இவை மத்திய ஆயுதப் படையினர்தங்குவதற்காக ஒப்படைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
காஷ்மீரில் இதேபோன்ற உத்தரவுகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதமும் பிறப்பிக்கப்பட்டன. பிப்ரவரி மாத உத்தரவை தொடர்ந்து பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது.ஆகஸ்ட் மாத உத்தரவுக்குப் பிறகுகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துரத்து செய்யப்பட்டது. தற்போது எல்லையில் பதற்றம் நிலவுவதால் காஷ்மீர் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.