

இந்தியாவில் கரோனா வைரஸுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளைவிட, கரோனாவில் பாதி்க்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்ைக ஒரு லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
கரோனாவில் நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859 பேராக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 9 ஆயிரத்து 712 ஆக உயர்ந்து, மீள்வோர் சதவீதம் 58.56 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 51 ஆக அதிகரி்த்துள்ளது
அதேசமயம், தொடர்ந்து 5-வது நாளாக நாள்தோறும் 15 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 1-ம் தேதி முதல் இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முதல்முறையாக கரோனாவில் சிகிச்சை பெறுவோரைக் காட்டிலும், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது
மத்திய அரசு மாநில அரசுகளுடனும், யூனியன் பிரதேசங்களுடனும் சேர்ந்து எடுத்த தீவிரமான நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கையாலும், தனிமைப்படுத்தும் நடவடிக்கை போன்றவற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்கம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போதுள்ள நிலையில் நாடுமுழுவதும் மருத்துவமனையில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 51பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது 1,036 கரோனா பரிசோதனை ஆய்வுகங்கள் இருக்கின்றன. இதில் அரசு சார்பில் 749 பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில் 287 மையங்களும் இருக்கின்றன
நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 95 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 82 லட்சத்து 27 ஆயிரத்து 802 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன
ஜூன் 28-ம் தேதிவரை கரோனா நோயாளிகளுக்காகவே 1,055 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 529 படுக்கைகள், 23 ஆயிரத்து 128 ஐசியு படுக்கைகள், 78 ஆயிரத்து 060ஆக்சிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன.
2,400 கோவிட் சுகதார மையத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 99 படுக்கைகள் உள்ளன, 11ஆயிரத்து 508 ஐசியு படுக்கைகள், 51 ஆயிரத்து 371 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இருக்கின்றன.
9,519 கோவிட் பராமரிப்பு மையத்தில் 8 லட்சத்தில் 34 ஆயிரத்து 128 படுக்கைகள் இருக்கின்றன. 1.87 கோடி என்95 முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளன. 1.17 கோடி பிபிஇ பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது