Last Updated : 28 Jun, 2020 11:55 AM

 

Published : 28 Jun 2020 11:55 AM
Last Updated : 28 Jun 2020 11:55 AM

கரோனா காலத்துக்கான குறுகியகாலக் காப்பீடு திட்டம்: ஜூலை 10ம் தேதிக்குள் வெளியிட நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி


நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறுகியக் காலப் பொதுக்காப்பீடுத் தி்ட்டம் மற்றும் மருத்துவக் காப்பீடு தி்ட்டத்தை வடிவமைத்து வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் வெளியிடக்கோரி காப்பீடு நிறுவனங்களுக்கு காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம்(ஐஆர்டிஏ) உத்தரவிட்டுள்ளது

இந்தியாவில் நாளக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859 பேராக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் தனிநபர்களுக்கு குறுகிய காலத்தி்ல் மட்டும் பயன்படக்கூடிய வகையில் பொதுக்காப்பீடு திட்டத்தையும், மருத்துவக் காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்த காப்பீடு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம்(ஐஆர்டிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா காலத்தில் தனி நபர்களுக்காக மருத்துவக்காப்பீடு உருவாக்கப்பட வேண்டும். கரோனா காலத்தில் பயன்படும் இந்த மருத்துவக் காப்பீடு,மற்றும் பொதுக்காப்பீட்டின் காலம் மூன்றரை மாதங்கள் ஆறரை மாதங்கள், ஒன்பதரை மாதங்கள் செல்லுபடியாகும் வகையில் இருத்தல் வேண்டும்.

காப்பீடு தொகையின் அளவு ரூ.50 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.5லட்சம்வரை இருக்க வேண்டும். "கரோனா கவாஸ் பாலிஸி" என்ற பெயரில் நிறுவனத்தின் பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த காப்பீடு திட்டத்தில் ப்ரீமியம் தொகை ஒருமுறை செலுத்தும் விதத்தில் மட்டுமே இருக்க வேண்டும். எந்த விதமான தள்ளுபடியும், முதல்கட்ட தவணை என்ற சலுகை ஏதும் இருக்கக்கூடாது.

மேலும், காப்பீடு செய்த நபர் கரோனாவில் பாதிக்கப்பட்டால் அவருக்கான சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தரப்படும், நீண்ட கால நோய்கள்(நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், இதயநோய்) இருந்தால் அதற்கான சிகிச்சைக்கான செலவு போன்றவையும் குறிப்பிட வேண்டும்.

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் காப்பீடு தொகை அளிக்கும் விகிதம், வீட்டில் சிகிச்சை எடுத்தால் காப்பீடு தொகை அளிக்கும் விகிதம், ஆயுஷ் சிகிச்சை, மருத்துவமனையிலிருந்து வந்தபின் எடுக்கப்படும் சிகிச்சைச் செலவு அனைத்தையும் நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும்.

இந்த கரோனா பாலிசியை வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் காப்பீடு நிறுவனங்கள் புதிதாக வடிவமைத்து வெளியிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x