Published : 26 Jun 2020 03:58 PM
Last Updated : 26 Jun 2020 03:58 PM

கனமழையால் பிஹாரில் பாதிப்பு; முழுவீச்சில் நிவாரணப் பணிகள்: அமித் ஷா உறுதி

பிஹார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிஹாரில் கடந்த 2 நாட்களாக பெய்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக 83 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர், பெரிய அளவில் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுபோலவே உத்தர பிரதேசத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிஹார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில், மின்னல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளா். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பிஹார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகுந்த துயரமடைந்துள்ளேன். இந்தப் பேரிடரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.

இரு மாநிலங்களிலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x