கரோனாவிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்று தெரியாது: 2 அடி தூர சமூக இடைவெளி, முகக்கவசம் அவசியம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

கரோனாவிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்று தெரியாது: 2 அடி தூர சமூக இடைவெளி, முகக்கவசம் அவசியம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

கோவிட்-19 வைரஸுக்கு தடுப்பு வாக்சைன் கண்டுப்பிடிக்கும் வரை 2 அடி இடைவெளி சமூக விலக்கல், மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை பயன்படுத்துவது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் ஆத்மநிர்பார் உ.பி. ரோஜ்கர் அபியான் என்ற திட்டத்தை அறிமுகம் செய்த மோடி பேசியதாவது, “நான் அனைவருமே நம் சமூக வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்திருப்போம். பிரச்சினைகள் இருக்கவே செய்யும். ஆனால் ஒரே சமயத்தில் அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையை உலகம் எதிர்கொள்ளும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

அனைவருக்கும் சிக்கல்கள், அனைவருக்குமே பிரச்சினைகள். இந்த நோயிலிருந்து நாம் எப்போதுதான் விடுபடுவோம் என்பது நமக்குத் தெரியாது.

எனவே வாக்சைன் தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படும் வரை ஒருவருக்கொருவர் 2 அடி தொலைவு கொண்ட சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கரோனாவைத் தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம்.

இன்று நான் உங்களுடன் வேலையின் சக்தியை அனுபவிக்கிறேன். இந்தத் திட்டம் வேலையின் சக்தியைப் பற்றியது. இந்தச் சக்திதான் உத்தரப் பிரதேசத்தின் தற்சார்பை நோக்கி உந்தித்தள்ளியுள்ளது.

உ.பி. போல் பிற மாநிலங்களும் இதே போன்ற திட்டங்களை கொண்டு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். கரோனா வைரஸ் காலத்தில் உ.பி. தைரியத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்தது. அது கரோனவைக் கட்டுப்படுத்திய விதம் எதிர்கொண்ட விதம் பிரமாதம். ” என்றார் மோடி.

சுமார் 1.25 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடையும் மிகப்பெரிய வேலை வாய்ப்புத்திட்டத்தை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் தொடங்கி வைத்தார், முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in