

இந்தியாவில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது, ஒரேநாளில் கரோனா பாதிப்பு 17,296 ஆக அதிகரித்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 4 லட்சத்து 90 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 407 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கையும் 15 ஆயிரத்தைக் கடந்து 15,301 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இன்று காலை 8 மணி நிலரவரப்படி சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 463 ஆக அதிகரிக்க, குணமடைந்தோர் எண்ணிக்கையும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும், 13,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
“ஆகவே இதுவரை 58.24% நோயாளிகள் குணமடைந்துள்ளனர். உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகளில் அயல்நாட்டினரும் உண்டு.
கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 407 கரோனா மரணங்களில் மகாராஷ்ட்ராவில் 192 பேரும், டெல்லியில் 64 பேரும், தமிழ்நாட்டில் 45 பேரும் குஜராத்தில் 18 பேரும், மேற்கு வங்கம் மற்றும் உ.பி.யில் தலா 15 பேரும், ஆந்திராவில் 12 பேரும், ஹரியாணாவில் 10 பேரும் மத்தியப் பிரதேசத்தில் 8 பேரும், பஞ்சாபில் 7பேரும், கர்நாடகாவில் 6 பேரும், தெலங்கானாவில் 5 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும் ஜம்மு காஷ்மீரில் 2 பேரும் இறந்துள்ளனர்.
அருணாச்சல், ஹிமாச்சல், ஜார்கண்ட், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கோவிட்-19-க்கு இறந்துள்ளனர்.
மாநிலவாரியாக பாதிப்பு மற்றும் இறந்தோர் எண்ணிக்கை வருமாறு:
முதல் 5 இடங்களில் மகாராஷ்ட்ரா, டெல்லி, தமிழகம், குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்கள் உள்ளன.
மஹாராஷ்டிரா - 1,47,741 - 6,931
டெல்லி - 73,780 - 2,429
தமிழகம் -70,977 - 911
குஜராத்- 29,520 -1,753
உ.பி.,-20,193-611
ராஜஸ்தான்-16,296-379
மேற்கு வங்கம்- 15,648-606
ம.பி.,-12,596-542
ஹரியானா-12,463-198
தெலுங்கானா-11,364-230
ஆந்திரா- 10,884 -230
கர்நாடகா-10,560- 170
பிஹார்-8,473-57
காஷ்மீர்-6,549-90
அசாம்-6,321-09
ஒடிசா-5,962-17
பஞ்சாப்- 4,679-120
கேரளா-3,726-22
உத்தர்காண்ட்-2,691-36
சத்தீஸ்கர்-2,452-12
ஜார்க்கண்ட்-2,262-12
திரிபுரா-1,290-01
மணிப்பூர்-1,056-0
கோவா-995-2
லடாக்-941-01
ஹிமாச்சல பிரதேசம்-839-09
புதுச்சேரி-502 -09
சண்டிகர்-423-06
நாகலாந்து-355-0
அருணாச்சல பிரதேசம் - 160- 1
தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் டியூ - 155-0
மிசோரம்-145-0