

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 12 வயது மாணவர் அத்வைத் கிருஷ்ணா 33பழைய செய்தித்தாள்கள் மற்றும் 10 ஏ4 காகிதம் மூலம் பழைய நீராவி இன்ஜின் பேப்பர் ரயிலை தயாரித்ததைப் பாராட்டி ரயில்வே அமைச்சகம் விதந்தோதியுள்ளது.
7வது படிக்கும் அத்வைத் கிருஷ்ணாவுக்கு இதைத் தயாரிக்க 3 நாட்களே தேவைப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்புக்காக அவருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக் குவிந்து வருகிறது.
ரயில்வே அமைச்சகத்தின் கவனமும் ஈர்க்கப்பட, அது தன் ட்விட்டர் பக்கத்தில், “கேரளா, திருச்சூரைச் சேர்ந்த 12 வயது ஆர்வ மாணவன் அத்வைத் கிருஷ்ணா தன்னுடைய படைப்பார்வத்தை வெளிப்படுத்தி ஒரு பிரமாதமான ரயில் மாதிரியை தயாரித்துள்ளார், துல்லியமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பேப்பர் ரயிலைத் தயாரிக்க 3 நாட்கள்தான் எடுத்துக் கொண்டார்” என்று ரயில்வே அமைச்சகம் விதந்தோதியுள்ளது.
இதன் புகைப்படங்கள், வீடியோக்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட முகநூலில் சுமார் 6,600 லைக்குகள் ட்விட்டரில் 1400க்கும் மேற்பட்டோர் ரசித்துள்ளனர்.
அத்வைத் கிருஷ்ணா சிஎன்என் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார், இவர் தந்தை ஒரு சிற்பி.