Last Updated : 25 Jun, 2020 09:45 AM

 

Published : 25 Jun 2020 09:45 AM
Last Updated : 25 Jun 2020 09:45 AM

பேரிடர் காலம் நல்வாய்ப்பு என்றார் மோடிஜி- ஆம், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி பணம் பார்க்கும் நல்வாய்ப்புதான்: காங்கிரஸ் கடும் கிண்டல் 

பெட்ரோல், டீசல் விலையை எந்த விதக் கட்டுப்பாடுமின்றி 17 நாட்களாக உயர்த்தி வருகிறது மத்திய அரசு. பொருளாதரம் சரிவுற்று மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத இந்த நிலையில் அத்தியாவசியமான பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவதும், இதன் மூலம் உயரும் மற்ற பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தாமலும் ‘வாய்ப்பு’ என்பதாக மோடி அரசு பார்ப்பதாக காங்கிரஸ் கடும் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இதனையடுத்து திக்விஜய் சிங் மற்றும் 150 காங்கிரஸ் தொண்டர்கள் மீது முதல் தகவலறிக்கை பதியப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இல்லத்திலிருந்து இந்தப் பேரணியை காங்கிரஸ் தொடங்கியது.

பேரணி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், “மக்கள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். பணவீக்கம் அதிகரித்து மக்கள் பசி, பட்டினியில் செத்துப் போகின்றனர். ஆனால் 18வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

ஆம், மோடிஜி கூறியது போல் ‘பேரிடர் காலம் நல் வாய்ப்பு’, ஆம் கரோனா பேரிடர் பணம் பண்ணுவதற்கான வாய்ப்புதான் அவர்களுக்கு” என்று கடுமையாகக் கிண்டலடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x