Last Updated : 25 Jun, 2020 09:29 AM

 

Published : 25 Jun 2020 09:29 AM
Last Updated : 25 Jun 2020 09:29 AM

சபரிமலை சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு: குழந்தைகளை வைத்து உடலில் ஒவியம் வரைந்து வீடியோ வெளியீடு


தனது அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து அதை வெளியிட்டதற்காக பெண்ணிய ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இருமுடிகட்டி நுழைய முயன்று சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா என்பது குறிப்பிடத்தக்கது.

ரெஹானா பாத்திமா சர்ச்சைக்குரிய வகையில் தொடரந்து செயல்பட்டு வந்ததால், அவர் பணியாற்றிய பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த மாதம் இவருக்கு கட்டாய ஓய்வு அளித்து நீக்கியதும் நினைவுகூரத்தக்கது

இந்த சூழலில் மற்றொரு சர்ச்சையில் ரெஹானா பாத்திமா சிக்கியுள்ளார். தனது மைனர் குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து, உடலும் மற்றும் அரசியல் என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார்.

மேலும், அந்த வீடியோ மற்றும்புகைப்படத்தை முகநூலிலும் பதிவிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் ஆண், பெண் உடல்குறித்த கருத்துக்களையும் ரெஹானா பாத்திமா பதிவிட்டிருந்தார்.

ஏற்கெனவே சர்ச்சைகளுக்கு பெயரெடுத்த ரெஹானா பாத்திமா வெளியிட்ட வீடியோவும் கேரள மாநிலத்தில் வைரலானது. அதேசமயம், எதிர்ப்பும் கிளம்பியது. தனது குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் எவ்வாறு ஓவியம் வரையலாம், இது குழந்தைகள் பாலியல் சீண்டல்கள் என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதையடுத்து, பத்திணம்திட்டா மாவட்ட பாஜக தலைவர் ஏ.வி.அருண் பிரகாஷ் திருவல்லா போலீஸில், ரெஹானா பாத்திமாவின் சர்ச்சைக்குரிய வீடியோவை காண்பித்து அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்திலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச்சட்டமான போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார்.

2018-ம் ஆண்டில் சபரிமலைக்கு செல்ல முயன்ற பாத்திமா

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான தகவல் மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்துக்கும் தகவல் சென்றது. இதையடுத்து, ரெஹானா பாத்திமா குழந்தைகள் வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் முழுமையான அறிக்கையை 10 நாட்களில் தாக்கல் செய்யக்கோரி பத்திணம்திட்டா மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கு மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

மேலும், தனது குழந்தைகளை வைத்து, தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து அதை வீடியோவா வெளியிட்டதால், குழந்தைகள் பாலியல்வன்முறை தடுப்புச்சட்டமான போக்ஸோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் ரெஹானா பாத்திமா மீது திருவல்லா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து திருவல்லா போலீஸார் ஆய்வாளர் கூறுகையில் “ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டம், தகவல்தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். எதற்காக இந்த வீடியோவை பாத்திமா எடுத்தார், ஏன் பதிவேற்றம் செய்தார், உள்நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x