

பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் வகை யில் அரசு பள்ளிகளில் கலை திருவிழாவை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாவட்ட, மாநில, தேசிய அளவில் என பல்வேறு படிநிலை களில் போட்டி நடத்தப்படும். இதன் இறுதி போட்டி டெல்லியில் வரும் டிசம்பர் 8 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும்.
திருவிழாவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் குழுவுக்கு ரூ.5 லட்சமும் 2-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும் 3-ம் இடம் பிடிப்பவர் களுக்கு ரூ.1 லட்சமும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.