Published : 25 Jun 2020 06:34 AM
Last Updated : 25 Jun 2020 06:34 AM

காணொலியில் முத்தரப்பு கூட்டம்: சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும்- சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு

சர்வதேச சட்டங்களை சீனா மதித்து நடக்க வேண்டும் என்று காணொலி காட்சி மூலம் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டித்துள்ளார்.

லடாக் எல்லைப் பிரச்சினை யால் இந்தியா, சீனா இடையே மோதல் நீடிக்கிறது. கடந்த 15-ம் தேதி எல்லையில் நடந்த மோத லில் தமிழக வீரர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் உயி ரிழந்தனர். சீன தரப்பிலும் 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் வெளியாயின. இதை யடுத்து, எல்லையில் இரு நாடு களும் வீரர்களை குவித்ததால் பதற்றம் நிலவியது. பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய தாவது:

சர்வதேச சட்டங்களை அனைத்து நாடுகளும் மதித்து நடக்க வேண்டியது அவசியம். கூட்டாளிகளின் நியாயமான கோரிக்கை, விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். பன்முகத் தன்மைக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பொது நன்மைக்காக பாடுபட வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடந்த காலங் களில் உலக அமைதிக்கு இந்தியா ஆற்றிய பங்களிப்பை உலக நாடுகள் நினைவுகூர வேண்டும்.

ஐ.நா. சபை தொடங்கப்பட் டபோது 53 நாடுகள் உறுப்பினர் களாக இருந்தன. தற்போது ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன. இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந் தியாவின் விருப்பத்துக்கு ரஷ்யா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

மேலும், லடாக் எல்லைப் பிரச் சினையை மனதில் வைத்தே, சர்வதேச சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என சீனாவை அமைச்சர் ஜெய்சங்கர் மறை முகமாக கண்டித்துள்ளார்.

முத்தரப்பு கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசும்போது, ‘‘சிக்கலான விவகாரங்களை பொறுப்புடன் கையாள வேண்டும். அப்போது தான் நல்லுறவை பேண முடியும்’’ என்று தெரிவித்தார்.

சுமுக தீர்வு

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் கூறும்போது, ‘‘லடாக் எல்லைப் பிரச்சினையில் ரஷ்யா உள்பட வேறு எந்த நாடும் தலையிடத் தேவையில்லை. இந்தியாவும் சீனாவும் இணைந்து எல்லைப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x