Published : 09 Jan 2014 12:26 PM
Last Updated : 09 Jan 2014 12:26 PM

தேர்தலுக்குப் பின்பு எதிர்காலம் சிறப்பாக இருக்கும்: வெளிநாடு வாழ் இந்தியர் தின விழாவில் நரேந்திர மோடி பேச்சு

தேர்தலுக்குப் பின்பு (ஆட்சி மாற்றம் ஏற்படுவதன் மூலம்) நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறினார்.

புதுடெல்லியில் வியாழக் கிழமை நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் தின விழாவில் நரேந்திர மோடி பேசியதாவது:

“இந்த விழாவில் புதன்கிழமை பேசிய பிரதமர் மன்மோகன் சிங் நல்ல விஷயம் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது, நாட்டின் எதிர்காலம் சிறப் பாக இருக்கும். அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை என்று கூறினார். நானும் அதையேதான் தெரிவிக்க விரும்புகிறேன்.

நல்ல நாள் விரைவில் வரப்போகிறது. ஆனால், அதற்காக இன்னும் 4 அல்லது 6 மாதங்கள் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்” என்றார்.

விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குப் பின், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும். அப்போது நல்ல காலம் பிறக்கும் என்ற கருத்தைத்தான் மோடி மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

மோடி மேலும் பேசியதாவது: “கடந்த 10 ஆண்டுகளாக பொருளா தார மந்த நிலை, வரலாறு காணாத ஊழல்கள், கொள்கைகளைச் செயல்படுத்த முடியாத முடக்க நிலை, பிரித்தாளும் அரசியல் ஆகி யவை காரணமாக மத்திய அரசின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்ட னர். ஊழல் நடைபெற்ற பின்பு, அது தொடர்பாக நடவடிக்கை எடுப் பதை விட, ஊழலே நடைபெறாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதுதான் சிறந்தது.

குஜராத்தில் செயல்படுத்திய தைப் போன்று ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர வேண்டும். விதிமுறை களை தீவிரமாக பின்பற்ற வேண் டும். வளர்ச்சியை எட்டுவதில் மாநிலங்களுக்கிடையே ஆரோக் கியமான போட்டி உள்ளது. இது மிகவும் நல்ல விஷயமாகும்.

நாடு சுதந்திரமடைந்து 66 ஆண்டு களாகியும் நல்லாட்சியை பெற முடியாத நிலை உள்ளது. ஆற்றல் நிறைந்த தேசத்தை முன்னேற விடாமல் பின்னுக்கு இழுப்பது மோசமான நிர்வாகம்தான். சிறந்த ஆட்சி நிர்வாகத்தைத் தரக்கூடிய வகையிலும், சவால்களை எதிர் கொள்ளக்கூடிய வகையிலும் நாட்டின் தலைமை செயல்பட வேண்டும்.

இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பின் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழாவை மத்திய அரசு சிறப்பாக கொண் டாட வேண்டும். அதே போன்று, மகாத்மா காந்தி தென்னாப்பிரிக் காவிலிருந்து திரும்பி வந்த நூற் றாண்டு விழாவையும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் பங் கேற்க வேண்டும். தேர்தலின்போது தாய் நாட்டுக்கு வந்து வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க இயலாத வர்கள், தாங்கள் தங்கியிருக்கும் நாடுகளில் இருந்தபடியே மக்கள வைத் தேர்தலில் தங்களின் பங்களிப்பைத் தர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x