

தெலங்கானா மாநிலத்தில் கலப்பட ‘கள்’ பழக்கத்தால் பாதிக்கப்பட்ட 96 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலங்கானாவில் கள் மற்றும் மதுபானக் கடைகள் நடத்த தனியாருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இந்நிலை யில் ‘கள்’ளில் அதிக போதை கிடைப்பதற்காக அதில் ‘டைசோஃபாம்’ எனும் மருந்து கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த கலப்பட கள்ளுக்கு தடை விதித்த மாநில அரசு, இதன் விற்பனை யை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இம்மாநி லத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின் பல கிராமங்களில் கலப்பட கள் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட 96 பேர் கடந்த சில நாட்களில் நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் மன நோயாளிகள் போல் நடந்து கொள்வதால், அவர்களின் கையை கட்டிலில் கட்டிப் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.