Published : 23 Jun 2020 05:36 PM
Last Updated : 23 Jun 2020 05:36 PM

கரோனா தொற்றால் இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு: சுகாதார அமைச்சகம் 

உலக சுகாதார நிறுவனத்தின் 22 ஜுன் 2020, தேதியிட்ட சூழல் அறிக்கையானது 1 லட்சம் மக்கள் தொகைக்கு எவ்வளவு இறப்பு என்ற எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில் தான் குறைவாக உள்ளதாகக் கூறியுள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு நோயாளிகள் இறப்பு எண்ணிக்கை 1.00 என உள்ளது. உலக சராசரி எண்ணிக்கை இந்தியாவை விட 6 மடங்கு அதிகமாக, அதாவது 6.04 என்ற அளவில் இருக்கிறது. இங்கிலாந்தில் கோவிட்-19 தொடர்பான இறப்புகள் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 63.13 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது.

இந்த இறப்பு எண்ணிக்கை ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் முறையே 60.60, 57.19, 36.30 என்று இருக்கிறது.

இந்தியாவில், நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சரியான நேரத்தில் பரிசோதனை செய்தல் மற்றும் கண்காணிப்பு, மிக விரிவான நோயாளிகளின் தொடர்பு குறித்தத் தடம் அறிதல் ஆகிய செயல்பாடுகளோடு திறம்பட மருத்துவமனை மேலாண்மையும் இணைந்து இருப்பது நோய் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுத்தல், தனிமைப்படுத்துதல், மேலாண்மை செய்தல் ஆகியவற்றை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களோடு இணைந்து இந்திய அரசு மேற்கொள்வதற்கு கடைபிடிக்கும் சீரான முறை, முன் கூட்டியே செயல்படுதல் மற்றும் தானே முன்வந்து செயல்படும் அணுகுமுறைக்கு இறப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே சாட்சியமாக உள்ளது.

நோயிலிருந்து குணம் அடைபவர்களின் விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இன்றைய தேதியில் குணம் அடைந்து வரும் கோவிட்-19 நோயாளிகளின் விகிதம் 56.38 சதவீதமாக உள்ளது. இதுவரை கோவிட்-19 நோயில் இருந்து 2,48,189 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 10,994 கோவிட்-19 குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 1,78,014 சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x