Published : 23 Jun 2020 05:05 PM
Last Updated : 23 Jun 2020 05:05 PM

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மீது அதிருப்தி: 3 தனியார் வானிலை ஆய்வு மையங்களிடம் பொறுப்பை ஒப்படைத்த கேரளா

புதுடெல்லி

ஸ்கைமெட், எர்த் நெட்வொர்க்ஸ், ஐபிஎம் வெதர் கம்பெனி ஆகிய தனியார் வானிலை கணிப்பு மையங்களுக்கு ரூ.95 லட்சம் நிதி அளிக்கும் உத்தரவை கேரளாவின் பேரிடர் மேலாண்மை துறை மேற்கொண்டுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக இந்திய வானிலை மையத்தின் மீது அதிருப்தி கொண்டு ஒரு மாநிலம் தனியார் வானிலை மையங்களை நாடியிருப்பது இதுவே முதல்முறை.

2019 பயங்கர வெள்ளம், வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதையடுத்து அதுபோன்ற வெள்ளத்தைக் கண்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் தங்களுக்கு திருப்திகரமாக இல்லை என்று கேரள அரசு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது.

அதாவது இந்திய வானிலை ஆய்வுமையம் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே 15 தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவ வாக்குறுதி அளித்தது. ஆனால் இது குறித்து ஒரு தகவலும் இல்லை என்று கேரள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இத்தகைய நம்பகத்தன்னையற்ற நெட்வொர்க் (ஐ.எம்.டி) மூலம் அரசு எச்சரிக்கைகளை உள்ளூர் தன்மைக்கேற்ப வெளியிட முடியாது. மாநிலத்தின் முக்கியமான தேவைகள் எதையும் ஐஎம்டி சந்திக்கவில்லை. இதனால் கேரள மாநிலத்தின் பேரிடர் தடுப்புத் திறன்களே இடையூறுக்குள்ளானது” என்கிறது கேரள அரசு.

ஆட்டமேடிக் வெதர் ஸ்டேஷன் காற்றின் வேகம், ஈரப்பதம், மழை அளவு ஆகியவற்றைக் கணக்கிடும். ஐஎம்டி சேவைகளை தேவைக்கேற்ப வழங்கவில்லை இதனால் நம்பகமான தனியார் வானிலை எச்சரிக்கை மையங்களை நாட வேண்டியிருந்ததாக கேரளா தெரிவித்துள்ளது.

ஆகவே முதல் முறையாக இந்தியாவில் ஒரு மாநிலம் தனியார் வானிலை மைய சேவைகளை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x