Published : 22 Jun 2020 09:39 PM
Last Updated : 22 Jun 2020 09:39 PM

மருத்துவமனைகளாக மாறிய ரயில் பெட்டிகள்: நோயாளிகளுக்கு சிகிச்சை தொடக்கம்

புதுடெல்லி

இந்திய ரயில்வேயின் கோவிட் சிகிச்சைக்கான சிறப்புப் பெட்டிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை தொடங்கியது.

கோவிட் -19 பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாற்றியமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை, இந்திய ரயில்வே பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பத் தொடங்கியுள்ளது.

வாரணாசி கோட்டத்திற்குட்பட்ட ‘மாவ்’ சந்திப்பில், 20 ஜுன் 2020 அன்று, கரோனா அறிகுறியுள்ள 42 நோயாளிகளும், 21 ஜுன், 2020 அன்று 17 நோயாளிகளும், கோவிட் ரயில் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் சுகாதாரச் சேவைகளுக்கு உதவும் வகையிலான முயற்சிகளை, இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்கென மாற்றியமைக்கப்பட்ட 5,231 ரயில் பெட்டிகளை, இந்திய ரயில்வே, மாநிலங்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.

மிக லேசான, ஆரம்ப நிலை அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மண்டல ரயில்வேக்கள், இந்த ரயில் பெட்டிகளை, கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றியமைத்துள்ளன.

தற்போதுவரை, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, கோவிட் சிகிச்சைக்கான 960 ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே அனுப்பியுள்ளது.

மொத்தமுள்ள 960 கோவிட் சிகிச்சைக்கான ரயில் பெட்டிகளில், தில்லியில் 503 பெட்டிகளும், ஆந்திராவில் 20 பெட்டிகளும், தெலங்கானாவில் 60 பெட்டிகளும், உத்தரப்பிரதேசத்தில் 372 பெட்டிகளும், மத்தியப்பிரதேசத்தில் ஐந்து பெட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

டெல்லியில், 9 ரயில் நிலையங்களில் கோவிட் சிகிச்சைக்கான 503 பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 50 பெட்டிகள் சாகூர்பஸ்தி ரயில் நிலையத்திலும், ஆனந்த் விஹாரில் 267 பெட்டிகளும், தில்லி சப்தர்ஜங்கில் 21 பெட்டிகளும், தில்லி சராய் ரோஹில்லா நிலையத்தில் 50பெட்டிகளும், தில்லி கன்டோன்மென்டில் 33பெட்டிகளும், ஆதர்ஷ் நகரில் 30 பெட்டிகளும், தில்லி சதாராவில் 13பெட்டிகளும், துக்ளகாபாத்தில் 13பெட்டிகளும், படேல்நகர் ரயில் நிலையத்தில் 26 பெட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட 372 பெட்டிகள், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சந்திப்பு, லக்னோ, வாரணாசி, பதோஹி, ஃபைசாபாத், சஹாரான்பூர், மிர்சாபூர், சுபேதார்கஞ்ச், கான்பூர், ஜான்சி, ஜான்சி பணிமனை, ஆக்ரா, நாகா ஜங்கிள், கோண்டா, நவ்தன்வா பரேச், வாரணாசி நகரம், மண்டுவாடி, மாவ், பட்னி, பரேலி நகரம், ஃபரூக்காபாத் மற்றும் காஸ்கஞ்ச் ஆகிய 23 ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

மத்தியப்பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட 5 கோவிட் சிகிச்சைப் பெட்டிகள், குவாலியரில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவிற்கான 20 பெட்டிகளும் விஜயவாடாவிலும், தெலங்கானாவிற்கான 60 பெட்டிகள், செகந்திராபாத், காச்சிகுடா மற்றும் அடிலாபாத் ஆகிய 3 ரயில்நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x