Published : 22 Jun 2020 08:19 PM
Last Updated : 22 Jun 2020 08:19 PM

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று; இன்று புதிதாய் 138 பேருக்குக் கரோனா- அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம்

கேரளாவில் இன்று 138 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதார மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். ஒரே நாளில் இதுவரை பதிவான கரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை இன்றுதான் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஷைலஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''கேரளாவில் புதிதாகக் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக மலப்புரத்தில் 17 பேர், பாலக்காட்டில் 16 பேர், எர்ணாகுளத்தில் 14 பேர், கொல்லம், மற்றும் கோட்டயத்தில் மாவட்டங்களில் இருந்து தலா 13 பேர், ஆலப்புழா மற்றும் திருச்சூரில் தலா 12 பேர், திருவனந்தபுரத்தில் 11 பேர், காசர்கோட்டில் 9 பேர், கோழிக்கோடு மற்றும் வயநாட்டில் தலா 5 பேர், பத்தினம்திட்டா மற்றும் இடுக்கியில் தலா 4 பேர், கண்ணூரில் 3 பேர்.

இன்று நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 87 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் (குவைத் -43, ஐக்கிய அரபு அமீரகம் -14, கத்தார் -14, சவுதி அரேபியா -9, ஏமன் -4, பஹ்ரைன் -1, ரஷ்யா -1 மற்றும் நைஜீரியா -1) மற்றும் 47 பேர் பிற மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் (மகாராஷ்டிரா -18, தமிழ்நாடு -12, டெல்லி -10, மேற்கு வங்கம் -2, உத்தரப் பிரதேசம் -2, கர்நாடகா -1, ஆந்திரா -1 மற்றும் பஞ்சாப் -1). முதன்மைத் தொடர்பு மூலம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் ஆவர்.

அதே நேரத்தில், சிகிச்சையில் இருந்த நோயாளிகளில் 88 பேருக்கு கரோனா நெகட்டிவ் வந்துள்ளது. அந்த வகையில் மலப்புரத்தில் 26 பேர், கண்ணூரில் 18 பேர், பாலக்காட்டில் 11 பேர், எர்ணாகுளத்தில் 9 பேர், கோழிக்கோட்டில் 7 பேர், கோட்டயம் மற்றும் திருச்சூரில் தலா 4 பேர் மற்றும் இடுக்கியில் இருவர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது வரை 1,747 நோயாளிகள் கரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 1,540 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,47,351 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இவர்களில், 1,45,225 பேர் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் உள்ளனர், 2,126 பேர் மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 241 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 4,734 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை, மொத்தம் 1,85,903 மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 2,266 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, அதிக ஆபத்துள்ள குழுக்களிடமிருந்து 38,502 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும் 37,539 மாதிரிகளின் முடிவுகள் கரோனா நெகட்டிவ் என வந்துள்ளன.

இன்று 4 புதிய இடங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று பட்டியலில் இருந்து விலக்கப்பட்டது. கேரளாவில் தற்போது 112 ஹாட் ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x