

பிஹாரின் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேபாளம் எல்லையில் தடுக்கிறது எனவே மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி தலையீடு கோருவதாக மாநில நீராதார அமைச்சர் சஞ்சய் குமார் ஜா கூறியதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் பிஹார் அரசையும் மத்திய அரசையும் விமர்சித்துள்ளார்.
“மத்திய அரசு மீது இப்போது பொறுப்பை நிதிஷ்குமார் அரசு சுமத்துகிறது, அதாவது பருவமழை தொடங்கிய பிறகு. மாநிலத்தின் வடக்குப்பகுதி முழுதும் வெள்ளக்காடாகி விடும் அபாயம் உள்ளது.
இத்தனை நாட்களாக இந்த ‘இரட்டை இன்ஜின் அரசு என்ன செய்தது? நிச்சயம் வரும் வெள்ளம் உண்மையில் பயங்கரமாக இருக்கும். பிஹார், வடக்கு பிஹார் வெள்ளக்காடாகி விடும். பின் ஏன் இது டபுள் இன்ஜின் அரசு என்று கூறிக்கொள்கிறது. இருவரும் பரஸ்பரம் கடிதம் எழுதிக் கொள்கிறார்கள். கடந்த வெள்ளத்துக்குப் பிறகு இந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.
15 ஆண்டுகளாக நிதிஷ் குமார் அரசு என்ன செய்கிறது? எல்லாம் இப்போது விழித்துக் கொள்கிறார்கள். இது தீர்க்கக் கூடிய பிரச்சினைதான் ஆனால் இவர்களால் தீர்க்க முடியாது.
நேபாளுக்கும் பிஹாருக்கும் பழைமையான நட்பு இருந்தது, இப்போது அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர். வளர்ச்சி பணிகள் குறித்து பிஹார் என்ன முயற்சிகள் மேற்கொண்டது?’ என்று கேள்வி எழுப்பினார் தேஜஷ்வி யாதவ்