Published : 20 Jun 2020 09:37 PM
Last Updated : 20 Jun 2020 09:37 PM

வீட்டில் யோகா: நாளை சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

சர்வதேச யோகா தினம், 2020க்கு இன்னும் ஒரு நாள் தான் உள்ளது. நாடு கொவிட் - 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் காலகட்டத்தில் அதன் ஆயத்த நடவடிக்கைகள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஆயினும் கூட அவர்கள் ஒரு எழுச்சியைக் காண்கிறார்கள்.

தற்போதைய சூழ்நிலைகளில் வெகுஜனக் கூட்டங்கள் அறிவுறுத்தப்படாததால், ஆறாவது சர்வதேச யோக தினத்தை (IDY 2020) குடும்பங்களுடன் அவரவர் வீட்டில் கொண்டாட ஆயுஷ் அமைச்சகத்தினால் ‘வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா’ ஊக்குவிக்கப்படுகிறது.
IDY 2020 இன் ஒரு பகுதியாக இருக்க ஏற்கெனவே லட்சக்கணக்கான மக்கள் உறுதியளித்துள்ளனர்.

மேலும் யோகா நிகழ்ச்சிகளில் நல்லிணக்கத்தை அடைவது ஆயுஷ் அமைச்சகத்தின் குறிக்கோள்களில் ஒன்றாகும். ஜூன் 21, 2020-ம் தேதி காலை 07.00 மணிக்கு பங்கேற்பாளர்கள் பொதுவான யோகா நெறிமுறையின் அடிப்படையில், அவரவர் வீடுகளிலிருந்து யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் இதை அடைய முடியும்.

கூடுதலாக, ஆயுஷ் அமைச்சகம் பிரசார் பாரதியுடன் இணைந்து டி.டி. நேஷனலில் ஒரு பயிற்சியாளர் தலைமையிலான யோகா அமர்வை ஒளிபரப்ப ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த தொலைக்காட்சி நிகழ்வின் முக்கிய சிறப்பம்சம் பிரதமரின் யோகா தின குறிப்புகள் ஆகும், இது காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

ஆறாவது சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்க மக்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு பெற்றவர்கள் ஊக்கமளிக்கும் செய்திகளையும், எண்ணங்களையும் பகிர்ந்துள்ளனர். அவர்களில் பிரபல திரைப்பட நடிகர்களான அக்‌ஷய் குமார், அனுஷ்கா சர்மா, மிலிந்த் சோமன், மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா உள்ளிட்ட சில பிரபலங்களும் அடங்குவர்.

ஆயுஷ் அமைச்சகத்துடன் பகிரப்பட்ட அவர்களின் விளம்பரச் செய்திகளில், பொறுமையாக, ஒழுக்கமாக நம் வாழ்க்கையை வழிநடத்த யோகா மட்டுமே வழி என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யோகா என்பது உலகெங்கிலும் உள்ள மக்களை ஒரு பொதுவான காரணத்திற்காக ஒன்றிணைத்து அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியைத் தெரிவிக்கும் ஒரு நடைமுறை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சர்வதேச யோகா தினத்திற்கு முன்கூட்டியே தயார் செய்ய பொதுமக்களுக்கு உதவுவதற்காக, ஆயுஷ் அமைச்சகம் அதன் டிஜிட்டல் வலைத்தளங்களான யோகா இணைய தளம் மூலம் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பல்வேறு ஆன்லைன் பயிற்சிகளை கிடைக்கச் செய்திருந்தது.

தொலைக்காட்சிகளில் பல பொது யோகா நெறிமுறை அமர்வுகள் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் வளங்கள் சர்வதேச யோகா தினத்திற்கு முன்னதாக மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து யோகா கற்க ஏராளமான வாய்ப்புகளை வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x