கரோனா நோயாளிகளில் குணமடைந்தோர் விகிதம் 54.13 சதவீதம் ஆக உயர்வு

கரோனா நோயாளிகளில் குணமடைந்தோர் விகிதம் 54.13 சதவீதம் ஆக உயர்வு
Updated on
1 min read

கரோனா நோயாளிகளில், குணமடைந்தோர் விகிதம் 54.13 சதவீதம் ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 9,120 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து, இதுவரை, மொத்தம் 2,13,830 பேர் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கொவிட்-19 நோயாளிகளில், குணமடைந்தோர் விகிதம் 54.13 சதவீதம் ஆகும்.

தற்போது, 1,68,,269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
அரசு பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 715 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கையும் 259 ஆக அதிகரித்துள்ளது (மொத்தம் 974). அவற்றின் விவரம் வருமாறு;

ரியல் டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 543 ( அரசு; 350+ தனியார்; 193) ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்; 356( அரசு; 338+ தனியார் 18) சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள் ; 75( அரசு;27+ தனியார் ;48) கடந்த 24 மணி நேரத்தில், 1,89,869 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் சோதிக்கப்பட்ட மாதிரிகள் இதுவரை 66,16,496 ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in