மும்பை பைகுலா பகுதியில் உள்ள ரிச்சர்ட்ஸ் சன் நிறுவனத்திற்கு சொந்தமான பொறியில் தொழிற்சாலை கரோனா மருத்வமனையாக மாற்றப்பட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் மும்பை, டெல்லி, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பையில் கரோனா பரவல் வேகம் அதிகமாக உளளது.
இதனைத் தொடர்ந்து மும்பையில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக மருத்துவமனைகள், பரிசோதனைகள், கரோனா சிகிச்சைக்காக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு தனியார் அமைப்புகளும், நிறுவனங்களும் கரோனா ஒழிப்பு பணிகளுக்காக தற்காலிக மருத்துவமனைகள், தனித்து இருக்கும் மையங்களை ஏற்படுத்துவதற்காக தங்கள் இடங்களை வழங்கி வருகின்றன.
இதன் ஒருபகுதியாக மும்பை பைகுலா பகுதியில் உள்ள ரிச்சர்ட்ஸ் சன் நிறுவனத்திற்கு சொந்தமான பொறியில் தொழிற்சாலை கரோனா மருத்வமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1000 படுக்கைகளுடன் மருத்துவமனை தயார் செய்யப்பட்டுள்ளது. ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளிகளுக்கு தேவையான வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.