Last Updated : 19 Jun, 2020 03:54 PM

 

Published : 19 Jun 2020 03:54 PM
Last Updated : 19 Jun 2020 03:54 PM

மாடுகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து காச நோய்க்கிருமிகளை அகற்றாமல் இந்தியாவில் ‘டீபி’-யை ஒழிப்பது கடினம்- பீட்டா அமைப்பு

இந்தியாவில் கரோனா உச்சம் பெற்று வரும் நிலையில் இந்தியாவின் என்றும் இருக்கும் நிரந்தரப் பிரச்சனை காசநோய் என்பதை பல நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

உலக காசநோய் சுமையில் இந்தியாவில் மட்டும் நான்கில் ஒரு பங்கு காசநோயாளிகள் உள்ளனர். 2018-ல் மட்டும் 27 லட்சம் புதிய காச நோயாளிகள் உருவானதாக மத்திய அரசின் தேசிய சுகாதாரப் பணி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் விலங்குகளிடமிருந்து காசநோய்க்கிருமியை அகற்றாமல் இந்தியாவில் மனிதர்களைப் பீடிக்கும் காசநோயை அகற்றவே முடியாது என்று பீட்டா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

2020-25 காலக்கட்டத்துக்குள் காசநோயை முற்றிலும் ஒழித்துப் பாதுகாக்க பிரதமர் மோடி திட்டங்களை வகுத்துள்ளார், இதனையடுத்து தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் ஒரு அங்கத்தினராகப் பங்கேற்கும் விலங்குகள் பாதுகாவல் அமைப்பான பீட்டாவிடமும் கருத்து கேட்கப்பட்டது.

பீட்டா இந்தியா சி.இ.ஓ. மற்றும் விலங்கு மருத்துவர் டாக்டர் மணிலால் வல்லியாத்தே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இது தொடர்பாகக் கூறும்போது, “விலங்குகளில் அதிகம் காணப்படும் காசநோய் கூறுகளை, அதாவது மாடுகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளில் காசநோய் ஒழிக்கப்படாமல் காசநோயை மனிதர்களிடமிருந்து அகற்றுவது கடினம். மேலும் இத்தகைய விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் (Zoonosis) மற்றும் மனிதர்களிடமிருந்து மீண்டும் விலங்குகளுக்குப் பரவும் (reverse zoonosis) ஆகியவற்றை ஒழிக்காமல் இந்தியாவில் டிபியை ஒழிப்பது சாத்தியமே அல்ல.

இந்தியாவின் மாடுகளில் 7.3% மற்றும் 22 மில்லியன் கால்நடைகளுக்கு இந்தியாவில் காசநோய் உள்ளது. ஒரு குழுவில் 12.6 % மனிதர்கள் பாக்டீரியாவைச் சுமக்கின்றனர், இது பெரும்பாலும் பசும்பாலை அப்படியே அருந்துவதானால் ஏற்படுகிறது.

மேலும் யானைகள், ஆடுகள், பன்றிகள், கோழிகள், பிடித்து வளர்க்கப்படும் வனப்பறவைகள் ஆகியவற்றில் டிபி உண்டு.

பால், முட்டை, இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளுடன் நெருங்கி இருக்கும் மனிதர்களுக்கு டிபி தொற்றுகிறது. இதனால்தான் மீன்வளத்துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்புப் பண்ணை, பால் பண்ணை ஆகியவை கால்நடைகளை கண்காட்சிப் பொருளாக நடத்த வேண்டாம் என்று மத்திய டீபி டிவிஷனுக்கு பரிந்துரை செய்கிறோம். இதோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு மனித-விலங்கு ஊடாடட்ங்களும் சட்ட ரீதியாக கட்டாயமானது அல்ல. பச்சைப் பாலைக் குடிக்கக் கூடாது என்பதை கிராம மக்களிடம் அறிவுறுத்த வேண்டும்.

தென் இந்தியாவில் நடத்திய ஆய்வு ஒன்றில் 600 யானைகளிடத்தில் நோய்க்குறி குணங்கள் இல்லாத டிபி தொற்று இருந்தது தெரியவந்தது. யானைகளிடமிருந்து மனிதர்களுக்கும் பிறகு மனிதர்களிடமிருந்து பிடித்து வைத்திருக்கும் பிற யானைகளுக்கும் டிபி பாக்டீரியா பாகன் மூலம் பரவுகிறது. மேலும் மனிதர்களிடமிருந்து மூன்று வன யானைகளுக்கு டிபி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மனிதர்களுக்கான டிபி சோதனை மற்றும் விலங்குகளுக்கான சோதனை நடைமுறைகளில் வேறுபாடு எதுவும் இல்லை. விலங்குகளில் டிபி இருப்பதை அறிய பாக்டீரியா கல்ச்சர் செய்யப்பட வேண்டும். டிபி கிருமியை சோதனைக்கூடத்தில் அடையாளப்படுத்த வேண்டும், இந்த நடைமுறைகளுக்கு 8 வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும்” என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x