Published : 18 Jun 2020 07:40 PM
Last Updated : 18 Jun 2020 07:40 PM

கரோனா தொற்று; டெல்லியில் மொபைல் பரிசோதனை நிலையம் தொடக்கம்: நாளொன்றுக்கு 25 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை

இந்தியாவின் முதல் மொபைல் தொற்று – பரிசோதனை நிலையத்தை (ஐ-லேப்) டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், கொவிட்-19 தொற்றுக்கான பரிசோதனை வசதி, தொலைத் தூரப் பகுதிகளுக்கும் சென்றடைவதற்காக இந்தியாவின் முதல் மொபைல் ஐ-லேபை (தொற்று நோய்களுக்கான பரிசோதனை நிலையம்) தொடங்கி வைத்துள்ளார்.

இந்தப் பரிசோதனை நிலையத்தை, எளிதில் செல்ல முடியாத தொலைத் தூரப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று பரிசோதனை செய்யலாம். இந்த
ஐ-லேப் நாளொன்றுக்கு 25 கொவிட்-19 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளையும், 300 எலிசா பரிசோதனைகளையும், காசநோய், எச்ஐவி-க்கான கூடுதல் பரிசோதனைகளையும், சிஜிஎச்எஸ் (மத்திய அரசின் சுகாதாரத் திட்டம்) கட்டண விகிதத்தில் செய்ய வல்லது.

மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயிரி தொழில்நுட்பத் துறை இந்த ஐ-லேபுக்கு உதவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x