நாட்டில் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது: சிஎம்ஐஇ ஆய்வறிக்கையில் தகவல்

நாட்டில் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது: சிஎம்ஐஇ ஆய்வறிக்கையில் தகவல்
Updated on
1 min read

கரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தொழில், வர்த்தக துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. இதனால் பலர் வேலையிழந்தனர்.

இந்நிலையில், ஜூன் மாதத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதையடுத்து, தொழில், வர்த்தக துறை சில கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கியது. பொதுமக்கள் வழக்கம் போல வேலைக்கு திரும்பியதால் இந்த மாதத்தில் வேலையின்மை சற்று குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 23.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 17.5 சதவீதமாகக் குறைந்தது. இரண்டாம் வாரத்தில் அதைவிட குறைந்து 11.6 சதவீதமானது.

இதுகுறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சிஎம்ஐஇ) நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறும்போது, "ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் அதிகரித்த வேலையின்மை தற்போது குறைந்துள்ளது. மேலும் கடந்த 14-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் தொழிலாளர்கள் பங்களிப்பு சதவீதம் 40.4 சதவீதமாக உள்ளது. இது மார்ச் 22-ல் ஊரடங்கு அறிவிக்கப்படும்போது 42.6சதவீதமாக இருந்தது. பின்னர் ஒருவார ஊரடங்குக்குப் பிறகு இது 39.2 சதவீதமாகக் குறைந்தது. ஏப்ரல்முதல் வாரத்தில் மேலும் குறைந்து36.1 சதவீதமானது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in